சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுதல், புதிய தொழில் திட்டங்களை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது….