தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள் அனைவரையும் சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கையெழுத்தட்ட புத்தகங்களை வழங்கி பாராட்டினார். திருவள்ளுவர் சிலை போன்ற பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார்.