சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் நேற்று வேளாண்துறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கினர். விசாரணையில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜன்(52), உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு 1 லட்சத்தை காரில் கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் இருந்து ஆவணமின்றி எடுத்து வந்த 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். …