Sunday, September 29, 2024
Home » சப்த கன்னியரை வழிபடும் முறைகள்

சப்த கன்னியரை வழிபடும் முறைகள்

by kannappan

சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு முறை ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், இரு பாலர்  இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள் ஆகும் .ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.1.பிராம்மிஅம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,தேர்வு எழுதும் காலத்தில்  தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.பிராம்மியின் காயத்ரி மந்திரம் “ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹேதேவர்ணாயை தீமஹிதன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”2.மகேஸ்வரிஅம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?வடகிழக்கு என்றுசொல்லக் கூடிய  ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை தருபவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.மகேஸ்வரி காயத்ரி மந்திரம்“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹேசூல ஹஸ்தாயை தீமஹிதன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”3.கெளமாரிஅம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கெளமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும்.கெளமாரியின் காயத்ரி மந்திரம்“ஓம் சிகி வாஹனாயை வித்மஹேசக்தி ஹஸ்தாயை தீமஹிதன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.”4.வைஷ்ணவிஅம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி.குறிப்பாக தங்கம் வெகுவாக கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹேசக்ர ஹஸ்தாயை தீமஹிதன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.”5.இந்திராணிஅம்பிகையின் உடலில் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும், அதேசமயம் முறையான இல்லற சுகத்தை தருவதும் இவளே!மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திராணியின் காயத்ரி மந்திரம்“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹேவஜ்ர ஹஸ்தாயை தீமஹிதன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்”6.வராஹிஅம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும், ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சி யளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால் இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருக பலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.வராஹியின் காயத்ரி மந்திரம்“ஓம் ச்யாமளாயை வித்மஹேஹல ஹஸ்தாயை தீமஹிதன்னோ வாராஹி ப்ரசோதயாத் ”7.சாமுண்டிஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.பதினாறுகைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்றுகண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றி யவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்துக்கள், சுகங்களைத் தருவாள்.இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.சாமுண்டி காயத்ரி மந்திரம்“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹேசூலஹஸ்தாயை தீமஹிதந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் ”நிறைய அன்பர்கள் குலதெய்வமே தெரியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.அவர்கள் அனைவரும் மாற்றாக சப்தகன்னியர்களை வணங்கி குலதெய்வ அனுக்கிரகம் பெறலாம்.சப்தகன்னியர் சக்தி…..!!!மதுகைடபர், சும்ப-நிசுமபன், ரக்த-பீமன், சண்ட-முண்டம், தூம்ரலோசனன்- மகிஷாசுரன் இப்படி ஒரு அசுரக் கூட்டம் அண்டத்தை ஆட்டிப்படைத்தது. தேவர்கள் மற்றும் மூம்மூர்த்திகளும் எவராலும் அசுரகூட்டத்தை வெல்ல  முடியவில்லை… அசுரர் கூட்டத்தை வதைக்க தேவர்களும் மும்மூர்த்திகளும் தங்கள் தேஜஸை அதாவது சக்தியே பிரித்து வெளியே எடுத்தனர். அந்த தேஜஸை தேவி(பெண்) ரூபம் எடுத்தது. பிரம்மனின் சக்தி பிரம்மிமகேசனின் சக்தி மகேஷ்வரிவிஷ்ணுவின் சக்தி வைஷ்ணவிமுருகனின் சக்தி கெளமாரிஇந்திரனின் சக்தி இந்திராணிவாரக மூர்த்தி சக்தி வாராகிசதாசிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய சக்தி சாமுண்டிஇந்த ஏழு திவ்யசக்திகளும் ஒன்று திரண்டு ஒரு பேரொளியாக மாறி,. அந்தப் பேரொளியின் பெயர்தான் “துர்கை”. துர்கை தேவி மற்ற தேவியருடன் சேர்ந்து போரிட்டு அசுரர்கள் கூட்டதை வதைத்து அனைவரையும் காத்து அருள்புரிந்தாள்.அப்படி வதைத்த பத்து நாட்களை தான் நவராத்திரியாக கொண்டாடுகிறோம் என தேவி மகாத்மியம் கூறுகிறது. அசுரக் கூட்டத்தை வதம் செய்ததால் சப்த கன்னியர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. உலகத்தில்  உள்ள பக்தர்களை காக்கவும் அவர்களுக்கு வேண்டிய வரங்கள் அளிக்கவும் கூடுதலான சக்திகள் தேவைப்பட்டது. தங்களின் தோஷம் நீக்கிக்கொள்ள ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து உமாபதியை தியானித்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்று சிவபெருமான் அருளால் கூடுதலான பல சக்திகளையும் பெற்றனர் சப்த கன்னியர்கள்!!குடந்தை நடேசன்…

You may also like

Leave a Comment

6 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi