நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மதுரை – விருதுநகர் பிரிவில் தண்டவாளத்தை இரட்டிப்பாக்கும் பணிகளுக்காக ரயில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 20691 தாம்பரம் – நாகர்கோவில் சந்திப்பு அந்தியோதயா அதிவிரைவு ரயில் அக்டோபர் 17ம் தேதி அன்று திண்டுக்கல் சந்திப்பில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்: 20692 நாகர்கோவில் சந்திப்பு – தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் அக்டோபர் 18ம் தேதி நாகர்கோவில் சந்திப்புக்கு பதில் திண்டுக்கல் சந்திப்பில் இருந்து சேவையைத் தொடங்கும். இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்: 16321 நாகர்கோவில் சந்திப்பு – கோயம்புத்தூர் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 18ம் தேதி நாகர்கோவில் சந்திப்புக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து சேவையைத் தொடங்கும். நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண்: 16322 கோயம்புத்தூர் சந்திப்பு – நாகர்கோவில் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 18ம் தேதி திண்டுக்கலில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல் – நாகர்கோவில் சந்திப்பு இடையே ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண்: 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 17 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வழி செல்லும். ரயில் எண்: 16340 நாகர்கோவில் சந்திப்பு – மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 18ம் தேதி அன்று புறப்பட்டு மானாமதுரை வழியாக செல்லும்.ரயில் எண்: 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து அக்டோபர் 18 புறப்படுவது மானாமதுரை வழி இயக்கப்படும்.ரயில் எண்: 16342 திருவனந்தபுரம் சென்ட்ரல் – குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்படுவது ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்படும். …