சேலம்: மேட்டூர் அணைக்கு காவேரி நீர்வரத்து வினாடிக்கு 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 9,644 கனஅடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் 3 மடங்கிற்கு மேல் நீர் வரத்து உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வரும் நீர் அளவு இதே நிலை தொடர்ந்தால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …