கூடுவாஞ்சேரி: வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இரணியம்மன் கோயில் பின்புறம் அரசுக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை தனியார் ஆக்கிரமித்து ஓட்டல் உள்பட பல்வேறு கடைகள் அமைத்தனர். வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், கடைகளை காலி செய்யவில்லை. இந்நிலையில், தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரங்களுடன், நேற்று அங்கு சென்று ஓட்டல் உள்பட 9 கடைகளை அகற்றி, நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது….