Wednesday, October 2, 2024
Home » நல்ல படங்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நல்ல படங்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

by kannappan

சென்னை: ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில் லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியுள்ள படம், தி வாரியர். ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, வில்லனாக ஆதி பினிஷெட்டி நடித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். விவேகா எழுதி சிம்பு பாடிய ‘புல்லட் சாங்’ என்ற சிங்கிள் பாடலை நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். பிறகு அவர் பேசியதாவது: ஒரு படத்தின் லிரிக் வீடியோ வெளியீடு இவ்வளவு பெரிதாக நடந்து நான் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய விழா, படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது. வாரியர் என்ற  தலைப்பு இயக்குனர் லிங்குசாமியின் குணத்துக்கு மிகவும் பொருந்தும். கோவிட் காலத்தில் யாரும் வெளியே வரவே பயந்த நேரத்தில், தைரியமாக வெளியே வந்து அவரது  சொந்த முயற்சியில்  பல உதவிகள் செய்தார். அவரும், நானும் 10 ஆண்டுகளுக்கு முன்பே இணைந்து பணிபுரிய திட்டமிட்டோம். அவர் இயக்க, விஷால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல் ஒலிப்பதிவு கூட நடந்தது. பிறகு ஏனோ அப்படம் உருவாகவில்லை. ஆனால், விரைவில் எனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் நாங்கள் இணைந்து பணிபுரிவோம். எப்போதுமே நல்ல படங்களை தமிழ் மக்கள் ஆதரித்து வரவேற்பு தருவார்கள். அதுபோல் இந்த படத்தையும் ஆதரிப்பார்கள். வரும் ஜூலை 14ம் தேதி ரிலீசாகும் இப்படத்தை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்….

You may also like

Leave a Comment

10 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi