சென்னை: கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,919க்கு விற்றது. சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.39,352க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,544க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.71.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,500 ஆனது….