மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சியில் தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வள்ளுவப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கள்ளபிரன்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் தலைமை தாங்கினார். மேலவலம்பேட்டை மருத்துவ அலுவலர் ரம்யா வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் ஒப்பில்லால் முன்னிலை வகித்தார்.காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச் சத்து குறித்த கண்காட்சி, டெங்கு நோய் விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர். இதில் கள்ளபிரான்புரம், வள்ளுவப்பாக்கம், நெய்குப்பி, அத்திமானம் ஆகிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்யசாய், ஊராட்சி மன்ற துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி, ஏற்பாடுகளை கள்ளபிரன்புரம் ஊராட்சி நிர்வாகம் செய்தது.திருக்கழுக்குன்றம்: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருக்கழுக்குன்றம் தாலுகா வழுவதூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சரவணன் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில், வழுவதூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை பெற்று சென்றனர். இதில், வழுவதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், வழுவதூர் ஊராட்சி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
கள்ளபிரான்புரம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
previous post