சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், தனக்கென தனி வழி வகுக்கும் தலைமையாக, சாதனைகளால் சரித்திரம் படைக்கும் புரட்சியாளராக, அன்னையாக, சகோதரியாக, தடைகளை தாண்டி தன்னை தானே செதுக்கிக் கொண்டு வாழ்வில் வெற்றி நடை போடும் சிங்க நிகர் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். …