பெங்களூரு: மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகம் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய தயார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேட்டியளித்தார். மேகதாது அணை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தமிழ்நாடு – கர்நாடக அரசுகள் தீர்வு காணமுடியும் எனவும், 2 மாநிலங்களும் விருப்பப்பட்டால் ஒன்றிய அரசு மத்தியஸ்தம் செய்ய தயார் எனவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார். …