சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் (பிப்ரவரி) வீட்டு உபயோக காஸ் சிலிணடர் சென்னையில் ரூ.915.50 ஆகவும், சேலத்தில் ரூ.933.50 ஆகவும் விற்கப்பட்டது. நடப்பு மாதத்திற்கான (மார்ச்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.105 அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,045.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.103.50 குறைந்து, ரூ. 2,145.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. …