* சீனாவின் பெய்ஜிங்கில் நடக்கும் ‘குளிர்கால ஒலிம்பிக் போட்டி’ பதக்கப்பட்டியலில் நேற்று மாலை நிலவரப்படி சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு 3 தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறது. தொடர்ந்து 2வது இடத்தில் உள்ள ரஷ்யன் ஒலிம்பிக் குழு தலா 2 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அடுத்த 3 இடங்களிலும் நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே என ஐரோப்பிய நாடுகளே உள்ளன. போட்டியை நடத்தும் சீனா 8வது இடத்திலும், அமெரிக்கா 15வது இடத்திலும் இருக்கின்றன.* இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்பதற்காக தினேஷ் கார்த்திக்(36) தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வயது தடையல்ல என்று சொல்லும் தினேஷ், ‘ஷிகர் தவான்(36) அணியில் இருப்பதையும், பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் மாலிக், முகமது ஹப்பீஸ் ஆகியோர் 40 வயது வரை ஆடியதையும்’ சுட்டிக் காட்டுகிறார்.* ‘பவுன்ஸ் பந்துகளை பார்த்தாலே கோஹ்லி பரவசமாகி விடுகிறார். ஆனால் அதில் தான் ஆட்டமிழக்கிறார். தென் ஆப்ரிக்காவில் நடந்ததுதான், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் அகமதாபாத்தில் நடந்தது. எனவே பவுன்சாகும் பந்துகளை எதிர்கொள்ளும் போது கவனத்துடன் விளையாட வேண்டும். இல்லாவிட்டால் கோஹ்லிக்குதான் பிரச்னை’என்று கவாஸ்கர் எச்சரித்துள்ளார்….