சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் வரும் 7ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது