திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு முன் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றிருந்ததால் போலீசார் அவரை உடனடியாக விடுவித்தனர்.