சென்னை: பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயக்குமார் மரியாதை..!!
பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செய்தார்.