மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 17,000 கனஅடியாக சரிந்தது. இரவு 7 மணியளவில், 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 14,629 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 17,014 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 110.77 அடியாகவும், நீர் இருப்பு 79.50 டிஎம்சியாகவும் உள்ளது.