Friday, September 20, 2024
Home » பாரதி இளம் கவிஞர் விருது கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் பொன்முடி

பாரதி இளம் கவிஞர் விருது கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் பொன்முடி

by Arun Kumar

சென்னை: மாநில அளவில் நடத்தப்பட்ட பாரதி இளம் கவிஞர் விருது கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதி இளம் கவிஞர் விருதும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் வழங்கினார்.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு முதலமைசர் அவர்களால் 2021ஆம் ஆண்டு முதல் கல்லூரி மாணாக்கர்கள் இடையே மாநில அளவிலான கவிதைப் போட்டி நடத்தி முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு மாணவனுக்கும். மாணவிக்கும் “பாரதி இளம் கவிஞர்” என்ற விருதுடன் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரசாணை எண் 229 உயர்கல்வித்துறை, நாள் 19.11.2021 இல் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு உயர்கல்வித் துறையால் ஆண்டுதோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு இடையிலான மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டுக்கான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டு மாணவர் பிரிவில் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர் செல்வன் அ.முகமது அன்சாரி முதலிடம் பிடித்தார். அதேபோல் மாணவியர் பிரிவில் சேலம், புனித சூசையப்பர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி செல்வி மு.நிவேதா முதலிடம் பிடித்தார். இவர்களுக்குப் பாரதி இளம் கவிஞர் விருதும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களால் இன்று (13.09.2024) வழங்கப்பட்டது. உடன் உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் இருந்தனர்.

You may also like

Leave a Comment

one − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi