கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் கார் டிரைவர் உடல்கருகி உயிரிழந்தார். இருக்கையில் அமர்ந்தபடியே கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார். இறந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.