மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாய்க்கு 2.5 லட்சம் ரூபாயில் தங்கச் சங்கிலி அணிவித்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், செம்பூரில் உள்ள நகைக்கடைக்கு தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். தங்கச் சங்கிலிகளை வரிசையாக மாடல்களை சோதித்த சரிதா அதை தனது செல்ல நாய்க்கு போட்டு அழகு பார்த்தார். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான அந்த தங்கச் சங்கிலியை பிறந்தநாள் பரிசாக தனது நாய் டைகருக்கு அணிவித்தார்.இந்த வீடியோவை சரிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் எங்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.