லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “உத்தரபிரதேசத்தின் தலித் பிரிவை சேர்ந்த பாஜ உறுப்பினர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி உள்ளார். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜ அரசு கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும். இல்லையெனில் தலித்துகளை தவறாக வழி நடத்துவதை பாஜ நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.