தேர்வு: SSC- Combined Graduate Level Exam- 2024.
காலியிடம் ஏற்பட்டுள்ள பணிகள்: Junior Statistical Officer/Inspectors/Sub Inspector/Assistant Section Officer/ Auditor/Accountant/Tax Assistant/ Postal Assistant/Sorting Assistant/UDC/Research Assistant/Executive Assistant/Junior Intelligence Officer.
கல்வித்தகுதி:
1. Junior Statistical Officer: புள்ளியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 32க்குள்.
2. Research Assistant: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது ஒரு வருட ஆராய்ச்சி பணி அனுபவம் அல்லது சட்டம்/ மனித உரிமைகள் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
3. இதர பணிகளுக்கு: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது; 18 முதல் 27க்குள்.வயது வரம்பு: 1.8.2024 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
1. Assistant Section Officer/Inspector/Sub-Inspector: ரூ.44,900-1,42,400.
2. Research Assistant/Junior Statistical Officer: ரூ.35,400-1,12,400.
3. Auditor/Accountant: ரூ.29,200-92,300.
4. Postal Assistant/UDC/ Tax Assistant/Sorting Assistant: ரூ.25,500-81,100.
ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் 3 கட்ட ஆன்லைன் தேர்வு (SSC-CGL Exam- 2024), கணினி திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
உடற்தகுதி/ உடற்திறன் தகுதி விவரம்: (Inspector/Sub-Inspector (CBIC)ஆண்கள்: குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி யினருக்கு 152.5 செ.மீ). மார்பளவு: 81 செ.மீ., 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 1600 மீட்டர் ஓடும் திறன் மற்றும் 30 நிமிடங்களில் 8 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.பெண்கள்: குறைந்த பட்ச உயரம்: 152 செ.மீ., உடல் எடை 48 கிலோ இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்்ந்த பெண்களுக்கு உடல் எடை 46 கிலோ இருந்தால் போதும். 20 நிமிடங்களில் ஒரு கி.மீ., நடக்கும் திறன், 25 நிமிடங்களில் 3 கி.மீ., சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்Sub Inspector (CBI): பணிக்கான உடற்தகுதி:
ஆண்கள்: உயரம்- 165 செ.மீ. மார்பளவு (விரிவடைந்த நிலையில்) 76 செ.மீ., பெண்கள்: உயரம் 150 செ.மீ., (உயரத்தில் எஸ்டி யினருக்கு 5 செ.மீ.,) தளர்வு அளிக்கப்படும்.
Sub Inspector (NIA): ஆண்கள்- உயரம்: 170 செ.மீ (எஸ்டியினருக்கு 165 செ.மீ.,). மார்பளவு விரிவடைந்த நிலையில் 76 செ.மீ., பெண்கள்: உயரம் 150 செ.மீ., இருக்க வேண்டும்.
Junior Intelligence Officer: (NCB): ஆண்கள் 165 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருகக வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2024.