சென்னை: சர்தார்-2 படத்தின் ஷூட்டிங்கின்போது 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டைக் கலைஞர் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் நிகழ்ந்த விபத்தில் ஏழுமலை என்பவர் உயிரிழந்தார். கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஏழுமலை உயிரிழந்தார். நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார்.