சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 -20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.