புதுடெல்லி: உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எல்.கே.அத்வானி வீடு திரும்பினார். பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு(96) நேற்று முன்தினம் இரவு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நலம் பெற்று நேற்று மாலை வீடு திரும்பினார்.
எல்.கே.அத்வானிக்கு சிகிச்சை
previous post