சென்னை: அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நலத்திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் தலைமைச் செயலகத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசினார். முதல்வரின் முகவரி துறையின் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தின்கீழ் பயனாளிகளை தொடர்பு கொண்டு கருத்து கேட்டார்.