சென்னை: சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் இன்று மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.