சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக இருந்த சேதுராமவர்மா, தொடக்கக் கல்வி இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரான லதா, அரசு தேர்வுகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று அந்த உத்தரவில் கூறியுள்ளர்.