ஜெலியோ இ-பைக்ஸ் நிறுவனம், ஜெலியோ எக்ஸ் மென் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.இதில் 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.64,543. டாப் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.87,573. இந்த ஸ்கூட்டரில் 60 வோல்ட்/ 32 ஏஎச் லீட் ஆசிட் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 55 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். சார்ஜ் செய்ய 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகும். மற்றொரு வேரியண்ட் 72 வோல்ட்/ 32ஏஎச் லீட் ஆசிட் பேட்டரி கொண்டது. முழுமையாக சார்ஜ் செய்ய 7 முதல் 9 மணி நேரம் ஆகும். அதிகபட்சம் 70 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். டாப் வேரியண்ட்டில் 60 வோல்ட் / 32ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். அனைத்து வேரியண்டிலும் 60/72 வோல்ட் பிஎல்டிசி மோட்டார் இடம் பெற்றுள்ளது. 180 கிலோ வரையிலான பாரத்தை மட்டுமே இழுக்கும் திறன் கொண்டது. திருட்டை தடுக்கும் அலாரம், முன்புற டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள், ரிவர்ஸ்கியர், பார்க்கிங் சுவிட்ச், யுஎஸ்பி சார்ஜர், டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஜெலியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
previous post