கொல்கத்தா: எதிர்க்கட்சி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கள் கருத்தை கேட்காமல் வேட்பாளரை அறிவித்துவிட்டதாக திரிணாமுல் அதிருப்தி தெரிவித்திருந்தது. மக்களவை சபாநாயகர் பதவிக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 1976ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.