காரிமங்கலம், மே 22: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 450 மாடுகள், 500 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ₹25 லட்சத்திற்கு மாடுகளும், ₹27 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3 லட்சத்திற்கு விற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. தொடர் மழையால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வராததால், கால்நடை விற்பனை மந்தமாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.