கன்னியாகுமரி: ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரி வருவதை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர் பகுதி, தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் வழியாக குமரி வரும் கனரக வாகனங்கள் காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டது.