டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வரவேற்பு அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.