மைசூரு: கர்நாடக மாநிலத்தில் மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜ வேட்பாளராக மைசூரு மன்னர் யதுவீர் சாமராஜ கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மனுவில் தனக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகள் குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, ‘வீடு, கார், நிலம் எதுவும் சொந்தமாக தனக்கு இல்லை. சொத்து மதிப்பு மொத்தம் ரூ.5 கோடி. இதில் தனது மனைவி திரிஷிகா குமாரி உடையார் பெயரில் ரூ.1.04 கோடியும், தனது பெயரில் ரூ.3.64 கோடியும் இருக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் ரூ.3.39 கோடியும், தனது மனைவி ரூ.1.02 கோடி மதிப்பில் நகைகள் வைத்துள்ளார் என்றும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.