பணி: Engineer Trainee. மொத்த காலியிடங்கள்: 100.
1. ET- Civil: 40 இடங்கள் (பொது-17, எஸ்சி-6, எஸ்டி-3, ஒபிசி-10, பொருளாதார பிற்பட்டோர்-4)
2. ET- Electrical: 25 இடங்கள் (பொது-13, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2)
3. ET- Mechanical: 30 இடங்கள் (பொது-13, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-3)
4. ET- Electronics & Instrumentation: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).
சம்பளம்: ரூ.50,000-1,60,000.
வயது: 28.02.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பிடெக் பட்டம் தேர்ச்சி பெற்று கேட்-2023 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பதாரர்களில் கேட்-2023 தேர்வு மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பின்னர் உதவி மேலாளர் பணி வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்-2023 தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.03.2024.