சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக – தேமுதிக கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 2011-ல் தேர்தலில் அமைந்த வெற்றிக் கூட்டணி, மீண்டும் அமைந்தால் வரலாறு திரும்பும். அதிமுகவுடன் தேமுதிக இணைந்தது ராசியான கூட்டணி; வெற்றி கூட்டணி,”இவ்வாறு பேசினார்.