ஸ்கோடா நிறுவனம் எபிக் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. 4.1 மீட்டர் நீளமே கொண்ட இந்த கார், ஸ்கோடா குஷக்கை விட சிறியது. போக்ஸ்வேகன் ஐடி.2 ஐ அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலத்துக்கு ஏற்ப நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டி வடிவ டிஆர்எல்கள் மற்றும் டெயில் லைட்டுகள், மேட்ரிக் எல்இடி தொழில்நுட்பம், 5.3 அங்குல விர்சுவல் காக்பிட், 13 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. எனினும், மேலும் சில அம்சங்களுடன் முழுமை பெற்று 2025ம் ஆண்டில்தான் இதுசந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் ஷோரூம் விலை 25,000 யூரோக்கள் (சுமார் ரூ.23 லட்சம்) என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.