சாத்தான்குளம், மார்ச் 20: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு போட்டி தேர்வுகளுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி பட்டறை நடந்தது. தொழில் நிர்வாகவியல் துறை பேராசிரியை மீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை வகித்து பேசினார். தொழில் நிர்வாகவியல் துறை பேராசிரியர் சண்முகசுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள் மரிய சகாய அந்தோணி, ஹரிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரசு போட்டித் தேர்வுகள் குறித்தும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். கருத்தரங்கில் கல்லூரியின் அனைத்து துறை இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை ஆண்டு மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தொழில் நிர்வாகவியல் துறை மாணவி சிவரஞ்சனி நன்றி கூறினார். ஏற்பாடுகளை போட்டி தேர்வுகளுக்கான கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மீனா, பேராசிரியை சண்முகசுந்தரி செய்திருந்தனர்.
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை
previous post