டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 72 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 195 பேர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 72 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல் போட்டியிடுவார் எனவும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.