துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை தனது சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி கெத்து காட்டியது. டி20ஐ தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது.
டி20 தொடரில் தோல்வியடைந்ததற்கு நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். கடந்த பிப்.29ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேமரூன் கிரீன் மொத்தம் 208 ரன்களை குவித்தார்(முதல் இன்னிங்சில் 174 ரன்கள்).
இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி ஓவலில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 256 ரன்கள் குவித்து 96 ரன்கள் முன்னிலை பெற்றது.
2வது இன்னிங்க்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 372 ரன்களை குவித்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி எடுத்தால் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.