சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு; இம்மாதமே கட்டுமானப் பணி தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே வழங்கிய வீட்டு மனையுடன் கூடுதலாக 380 ச.அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது என்றும் சின்னப்பிள்ளைக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உறுதியளித்தபடி வீடு இதுவரை வழங்கவில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.