போக்ஸ்வேகன் நிறுவனம், ‘மை போக்ஸ்வேகன்’ என்ற ஆப்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் புதிய வாகனங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். கார்களின் 360 டிகிரி தோற்றத்தை பார்க்கலாம். சோதனை ஓட்டத்துக்கு கோரிக்கை விடுக்கலாம். இதுதவிர, போக்ஸ்வேகன் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை சர்வீஸ் விடுவதற்கான காலம், எரிபொருள் பயன்பாடு மற்றும் செலவு, சர்வீஸ் கட்டணங்கள், இஎம்ஐ உட்பட பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இந்த ஆப்சை பதிவிளக்கம் செய்யலாம் என போக்ஸ் வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் ‘மை போக்ஸ்வேகன்’ஆப்
previous post