ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஸ்பெக்டர் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ₹7.5 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியச் சந்தையில் மிக அதிக விலையுள்ள எலக்ட்ரிக் காராக இது உள்ளது. இந்தக் காரில் 102 கிலோவாட்அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கி.மீ தூரம் வரை செல்லும். 195 கிலோவாட் அதிவேக சார்ஜர் மூலம் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு 34 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 50 கிலோவாட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 95 நிமிடங்கள் ஆகும். இந்த காரில் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை அதிகபட்சமாக 500 எச்பி பவரையும் 900 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும்.