ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை 5-7, 3-6, 7-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் எதிர்கொள்கிறார்.