சென்னை: சென்னையில் அகில காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டமன்ற காங். தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.