சென்னை: பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக ரேஷன் கடைகள் அனைத்தும் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக 12ம் தேதி (வெள்ளி) அன்று அனைத்து நியாய விலை கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக வருகிற 16ம் தேதி (செவ்வாய்) அன்று அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.