அமெரிக்காவைச் சேர்ந்த கோலீன்மேரி என்பவர் தனது இரு இரட்டைக் குழந்தைகள் சினிமாவில் வரும் காட்சியை அப்படியே செய்ய முயற்சிக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘ஃப்ரோஸன்’ படத்தில் வரும் ‘டு யூ வாண்ட் டு பில்ட் ஏ ஸ்னோ மேன்…’ என்கிற பிரபல பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருக்க இரு குழந்தைகளும் படத்தில் வரும் எல்ஸா மற்றும் அன்னா கதாபாத்திரங்கள் செய்வதை அப்படியே செய்ய முயற்சிக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவெனில் இருவருக்கும் அதிகபட்சம் 2 வயதுகூட இருக்காது என்பதுதான். 2017ல் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ மீண்டும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் முன்பு நல்லதை மட்டுமே காண்பிக்க வேண்டும் என்கிறார்கள். எதையும் கற்பூரம் போல் பற்றிக் கொண்டு கற்றுக்கொள்வார்கள் குழந்தைகள்.