சென்னை: வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வது தொழில் வளர்ச்சியின் பெரும் பாய்ச்சல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ரூ.16,000 கோடியில் தூத்துக்குடியில் நிறுவனம் அமையவுள்ளது.