திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 45.59 நிமிடத்தில் 108 சூரிய நமஸ்காரம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் 81 வயதான மூதாட்டி சரஸ்வதி இடம்பிடித்து அசத்தியுள்ளார். 10 ஆண்டுகளாக யோகா செய்து வரும் இவர், ஏற்கனவே லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்